மதுரை : விக்கிரமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கலியுகநாதன் தலைமை தாங்கி கிராம பொதுமக்களிடம் 68 மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் கிராம நிர்வாக அலுவலர் முத்துமணி, துணைத்தலைவர் செல்வி, ஊராட்சி செயலாளர் பால்பாண்டி, பிஎல்ஓ அமைப்பாளர் ஜெயபாண்டி அம்மாள்,வார்டுஉறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இதே போல் முதலைக்குளம் ஊராட்சியில் ஊராட்சிமன்றதலைவர் பூங்கொடிபாண்டி கிராம பொதுமக்களிடம் 77 மனுக்கள் பெற்றுக் கொண்டார். துணைத்தலைவர் ரேவதிபெரிய கருப்பன், ஊராட்சிமன்றச்செயலாளர் பாண்டி, கிராமநிர்வாகஅலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கிராமஉதவியாளர் பிரபு, வார்டுஉறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.சக்கரப்ப நாயக்கனூர் ஊராட்சி மன்றத்தில் தலைவர் ஜென்சிராணி சுப்பிரமணியன் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று கிராம பொது மக்களிடம் 11 மனுக்களை பெற்றுக் கொண்டார். துணைத்தலைவர் வெள்ளையம்மாள், ஊராட்சிசெயலாளர் குமார்,கிராமநிர்வாக அலுவலர் பவித்திரா, வார்டுஉறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பானாமூப்பன்பட்டி ஊராட்சி மன்றத்தில் தலைவர் மகாராஜன்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கிராமபொதுமக்களிடம் 15 மணுக்கள் பெற்றுகொண்டார்.துணைத்தலைவர் ஆறுமுகம், ஊராட்சிசெயலாளர் பாண்டி,வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.எரவார்பட்டி ஊராட்சியில் தலைவர் பாண்டி,துணைத்தலைவர் செந்தாமரை, ஊராட்சிசெயலாளர் மலைச்சாமி ஆகியோர் கிராம பொதுமக்களிடம் 27 மனுக்களை பெற்றுக் கொண்டனர். வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு முகங்களில் செல்லம்பட்டி ஒன்றிய மண்டல துணைவட்டாரவளர்ச்சி அலுவலர் முனியப்பன் ஆய்வு செய்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி