மதுரை : தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகராட்சி 52வது வாடு கீழ ஆவணி மூல வீதி பகுதியில் பாதாள சாக்கையில் சுத்தம் செய்யும் நவீன இயந்திர செயல்பாடுகளை பார்வையிட்டார்.
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா , மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் உடன் உள்ளனர். தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராசன், மதுரை மாநகராட்சி, 55 வது வார்டு பகவான் செட்டி மடம் பகுதியில் அங்கன்வாடி மையம்,புதிய நியாய விலை கடை கட்டிடத்தை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா , மாநகராட்சி மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் உடன் உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி