திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அக். 20 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சிலம்பம் மற்றும் கராத்தே மாணவர்கள் பங்கேற்ற ஆஸ்கார் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட சிலம்பம் மற்றும் கராத்தே மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கராபுரம் கராத்தே மணி செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சந்தானம் சிலம்பம் அகாடமி மாணவர்கள் 50 பேர் மாவட்டத் தலைவர் ஆசான் ச.சரவணன் தலைமையில் கலந்து கொண்டனர்.
உதவி பயிற்சியாளர் கராத்தே கு. ராஜசேகர் உடனிருந்தார். இதில் திருவண்ணாமலை அடி அண்ணாமலையை சேர்ந்த வினோத் – மேனகா ஆகியோரின் மகளும், சந்தானம் சிலம்பம் அகாடமியின் பயிற்சி மாணவியுமான (4). வயதுடைய சிறுமி ஸ்ரீதன்யா கலந்து கொண்டு சுமார் 40 நிமிடம் சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை செய்து அசத்தினார். மேலும் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். உலக சாதனை படைத்த சிறுமி ஸ்ரீதன்யாவை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களின் பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்தினர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு.கஜேந்திரன்