திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழக ஆளுநர் ஆர் . என்.ரவி வருகை புரிந்தார். கொடைக்கானலில் உள்ள சங்கரா வித்யாலயா பள்ளியில் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார். அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார். ஆளுநர் கொடைக்கானல் வருகையை முன்னிட்டு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கொடைக்கானல் வந்த ஆளுநர் ரவியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர் தங்கி இருந்த விடுதி முன்புறம் மற்றும் அவர் பங்கேற்க சென்ற வழிகளில் திராவிடர் தமிழர் மன்றம் சார்பில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா