செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் அடுத்த ஜி கே எம் கல்வி குழுமத்தின் சார்பில் பட்டமளிப்பு விழா ஜி கே எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் மரைன் ஜயின்ஸ் அண்ட் டெக்னாலஜி அதன் பட்டமளிப்பு விழாவை கொண்டாடியது. ஜி கே எம் குருப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர். கே. சுஜாதா பாலசுப்பிரமணியன் மேற்பார்வையில் பட்டமளிப்பு தினத்தை தொடங்கி வைத்து ‘ தமிழ் தாய் வாழ்த்து ‘ பாடலுடன் விழா தொடங்கியது. மேலும்
வரவேற்புரை மற்றும் அறிக்கையை தலைமை பொறியாளர் ஆர். சுந்தரராஜன் ஜி கே எம் , எம் ஐ எஸ் டி மற்றும் டாக்டர். மகாலட்சுமி, துணை முதல்வர் ஜி கே எம், எம் ஐ எஸ் டி, வழங்கினார். இதனை அடுத்து சென்னை (Samsara shopping private limited) துணை பொது மேலாளர் ராகுல் மோடி தலைமை விருந்தினராக கலந்துக்கொண்டு பட்டமளிப்பு தின உரையை நிகழ்த்தினார்.
அதைத் தொடர்ந்து அழகப்பா பல்கலைக்கழக ரேங்க் பெற்றவர்கள் மற்றும் முதலிடம் பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாணவர் மாணவியர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். அதனைத் தொடரந்து பட்டமளிப்பு விழா தேசியகீதத்துடன் இனிதே நிறைவு பெற்றது.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்