சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை ஆளுநர் மாளிகையில் நடந்த “ஒரு நூலகமே ஒரு புத்தகமாக” என்ற புத்தக வெளியீட்டு விழாவில், புண்ணியபூமியான தமிழ்நாடு, தமிழ் மொழி மற்றும் அதன் வளமான இலக்கியங்கள், பாரதத்தையும் அதன் நாகரிக பாரம்பரியத்தையும் எவ்வாறு வடிவமைத்து செழுமைப்படுத்தின என்பதையும் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள் அவற்றை அழிக்க எவ்வாறு முயன்றனர் என்பதையும் தமிழ்நாட்டின் மேதகு ஆளுநர் ரவி இகாப(ஒய்வு) அவர்கள் விளக்கினார். துரதிருஷ்வடசமாக சுதந்திரத்துக்குப் பிறகும் கூட ஒரு இழிவான அரசியல் சித்தாந்தம், செழுமையான தமிழ் கலாசார பாரம்பரியத்தை சீரழித்து வந்துள்ளது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் தமிழ் மொழியை மேம்படுத்துவதற்காக அயராது உழைத்து வரும் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் வசீகரிக்கும் தலைமையின் கீழ் நமது தேசம், தனது நாகரிக பாரம்பரியத்தில் பெருமையுடன் 2047 ஆம் ஆண்டுக்குள் தன்னிறைவாகவும், வளர்ச்சியடைந்த பாரதம் ஆகவும் தனது இலக்கை எட்டும் விழிப்பைப் பெற்றுள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி