மதுரை : மதுரை மாவட்டத்தில், கடந்த ஒரு மாதமாக பரவலாக கனமழை பெய்து வந்தது. இதற்கிடையே நேற்று மாலையில் சுமார் 2 மணி நேரம் மதுரை மாநகர் முழுவதும் பரவலாக கன மழை பெய்தது. தொடர்ந்து, பெய்து வரும் கனமழை காரணமாக மாடக்குளம் பிரதான கண்மாய் நிரம்பி அதிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு முத்துப்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், முத்து பட்டி கண்மாய் தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில் கண்மாயிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டபோது, வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக வெள்ளநீர் மதுரை மாநகராட்சி வார்டு எண் 73 க்கு உட்பட்ட பாண்டியன் நகர் குடியிருப்பு பகுதிக்குள் கண்மாய் நீர் சூழ்ந்தது. இதனால், பாண்டியன் நகர் குடியிருப்பு பகுதிக்குள் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் ,அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி