மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான், CSI பள்ளியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில்,
பொது மருத்துவம் பல் மருத்துவம் நுரையீரல் மருத்துவம் மகளிர் மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. மதுரை ராமநாதபுரம் பேராய நிர்வாகிகள் அருட்திரு சதீஷ், அருட்திரு எபினேசர் துரைராஜ், ராபின்சன் செல்வகுமார், சார்ஜர் நல்லு பிரசாத், டேனியல், பொன்ராஜ், மற்றும் திருச்சபை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 250 க்கு மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி