• About
  • Contact
Friday, May 16, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Other News

பேருந்து பயணிகளிடம் துண்டு பிரசுரங்கள்

admin by admin
January 12, 2023
in Other News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு பேரணியை மேலாண்மை இயக்குனர் ஆ.ஆறுமுகம் தொடங்கி வைத்தார். மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணியை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் ஆ.ஆறுமுகம், தொடங்கி வைத்து அங்குள்ள பேருந்து பயணிகளிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். பின்பு, அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது:
மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா நடத்த அரசு உத்தரவிட்டதின் பேரில், இந்த ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா நடத்த முடிவு செய்யப்பட்டு, தொடக்கமாக மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் பயணிகளின் பாதுகாப்பு, பாதசாரிகளின் கவனத்திற்கு, ஓட்டுனர்களின் கவனத்திற்கு போன்ற துண்டு பிரசுங்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி, பேரையூர், திருப்பரங்குன்றம், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி போன்ற பேருந்து நிலையங்களில் விபத்தில்லா பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதனால், தற்போது விபத்துக்கள் குறைந்து வருவதோடு முற்றிலும் விபத்தில்லாத சூழ்நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 600 சிறப்பு பேருந்துகள் கூடுதல் வழித்தடத்துடன் இயக்கப் படுகின்றன. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள முக்கிய பேருந்து நிலையங்களில் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கழகத்தில் உள்ள பணிமனைகளின் எண்ணிக்கை 40 ஆகும். இக்கழகத்தில் உள்ள மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 2300. இப்பேருந்துகளில் பயணிகளை பொறுத்தவரை 10.61 இலட்சம் நாளொன்றுக்கும், 318.30 இலட்சம் பயணிகள் மாதந்தோறும் பயன்படும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர், அறிவித்த முக்கிய திட்டமான மகளிர் கட்டணமில்லா பேருந்துகளில் தினசரி 5 இலட்சம் மகளிர்கள் கட்டணமில்லா பயணம் செய்து வருகிறார்கள்.

மேலும், உயிர் பலி விபத்து ஏற்படுத்திய கழக மற்றும் தனியார் ஓட்டுநர்களுக்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சிறந்த ஓட்டுநர் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
500 நபர்களுக்கு மேல் மக்கள் தொகையைக் கொண்ட அனைத்து கிராமங்களுக்கும் இக்கழகம் பேருந்து சேவையினை தொடர்ந்து வழங்கி வருகிறது என்று பேசினார்.
இப்பேரணியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள் ராகவன், சமுத்திரம், துணை மேலாளர்கள் அறிவானந்தம், ரவிக்குமார், முருகானந்தம், இணை இயக்குனர் (மக்கள் தொடர்பு) இரா.பாஸ்கரன், மக்கள் தொடர்பு அலுவலர் சந்தான கிருஷ்ணன் போக்குவரத்து காவல் துறை உதவி ஆணையர்கள் மாரியப்பன், செல்வின், ஆய்வாளர் கணேஷ்ராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Tags: Madurai
Previous Post

மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம்

Next Post

விற்பனைக்கு குவிந்துள்ள கரும்புகள்

admin

admin

Next Post

விற்பனைக்கு குவிந்துள்ள கரும்புகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

May 15, 2025
சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

May 14, 2025
நகராட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு

நகராட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு

May 14, 2025
உலக செவிலியர் தின விழா

உலக செவிலியர் தின விழா

May 13, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.