இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து உயர்நிலை மேல்நிலை தொடக்க மற்றும்நடுநிலைப்பள்ளிகளில் (10.04.2023) (திங்கட்கிழமை) மற்றும் (24.04.2023) (திங்கட்கிழமை)
ஆகிய நாட்களில் பிற்பகல் 3.00 மணி முதல் 04.30 மணி வரை அந்தந்த பள்ளிகளில் சிறப்பு
மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அனைத்து மாணவர்கள்,
பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சி குறித்த
திட்டங்களை மேற்கொள்ளவும் மற்றும் பள்ளிகளில் படிப்பை தொடராமல் இருக்கும்
மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு வரவழைத்து படிப்பை தொடர்வதற்கான
நடவடிக்கை மேற்கொள்ளுதல், பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்
குறித்து ஆலோசித்திடும் வகையில் இக்கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகள்
மேற்கொள்ள வேண்டும். இக்குழு கூட்டத்தின் நோக்கம். பள்ளிகளில் படிப்பை தொடராத மாணவர்களை கண்டறிந்து அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து அந்த மாணவருக்கு தேவையான படிப்பை தொடரும் வகையில் துணை தேர்வு எழுதுவதற்கான ஆலோசனை வழங்குதல் மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்த ஆலோசனை வழங்குவதே இக்கூட்டத்தின் நோக்கம் ஆகும். எனவே மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் சிறப்பு பள்ளி
மேலாண்மைக்குழு கூட்டத்தில் 100மூ அனைவரும் பங்கேற்று வரும் காலத்தில் இடைநிற்றல்
என்ற சொல்லே இல்லாத நிலையை உருவாக்க வேண்டுமென இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி