உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு,பெடரல் வங்கி ஊழியர்கள் 20 க்கும் மேற்பட்டோர் சேலம் – கன்னங்குறிச்சியில் அமைந்துள்ள மூக்கனேரி ஏரி மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள பூங்காவில் பரவி இருந்த பிளாஸ்டிக்/நெகிழி கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருளான “நெகிழி கழிவுகளை ஒழிப்போம்” என்ற கூற்றுக்கு ஏற்ப பெடரல் வங்கி ஊழியர்கள் சமூக அக்கறையுடன் ஏரி மற்றும் பூங்காவில் கிடந்த. பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சி ஏரி மற்றும் பூங்காவிற்கு வருகை தந்த பொது மக்களுக்கு விழிப்புணர்வு தரும் நிகழ்வாக அமைந்தது, மேலும் வங்கி ஊழியர்களுக்கு பொது மக்கள் தங்கள் பாராட்டை தெரிவித்தனர்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா