திண்டுக்கல் : தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நத்தம் அருகே, சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில், உள்ள 21 ஊராட்சிகளில் புதன்கிழமை கோரிக்கை மனுக்கள் வாங்கும் முகாம்கள் நடைபெற்றன.இதில், திம்மணநல்லூர் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டக்கவுன்சிலர் விஜயன் தலைமை வகித்தார்.சாணார்பட்டி ஒன்றியக்குழுத் தலைவர் பழனியம்மாள், மாவட்ட க்கவுன்சிலர் லலிதா முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். அப்போது பேசிய அவர் ,மகளிர் உரிமை தொகை இந்தியாவின் சிறப்பு திட்டம். இதில், கிடைக்க பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
இந்த, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெறும் முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 100 சதவீத தீர்வு காணப்படும் என்றார். 21 ஊராட்சிகளில், நடைபெற்ற முகாம்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.இந்நிகழ்ச்சியில், தி.மு.க சாணார்பட்டி ஒன்றியச் செயலாளர்கள் தர்மராஜன், மோகன்,சாணார்பட்டி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராம்தாஸ், நத்தம் பேரூராட்சி சேர்மன் சேக்சிக்கந்தர் பாட்சா, சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளையராஜா, அருள்கலாவதி, திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் வில்சன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள். கிராம நிர்வாக அலுவலர்கள் , பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி