மதுரை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை 2023-2024 கல்வியாண்டில், நடத்திய கலைத்திருவிழா போட்டிகளில் குழு நடனம் தேவராட்ட போட்டியில், மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் தெ.மேட்டுப் பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு விழா நூலக அரங்கத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யா மொழி தலைமையில் நடைபெற்ற விழாவில்,மாநில அளவில் முதலிடம் பெற்றதற்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் ,விழாவில் பரிசு பெற்ற மாணவர்கள்
தேவராட்டம் நிகழ்ச்சியை நடத்தி காட்டினர். வெற்றி பெற்ற மாணவர்களை மதுரை முதன்மைக்கல்வி அலுவலர்கார்த்திகா, மேலூர் மாவட்டக்கல்வி அலுவலர் முத்து லெட்சுமி ஆகியோரும் பள்ளி மேலாண்மைக்குழுத்தலைவர் ரங்கநாயகி, பெற்றோர் ஆசிரியர் கழகைத்தலைவர் பரமசிவம், தெ.மேட்டுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் கூடம்மாள் பழனிச்சாமி, தலைமையாசிரியர் சந்திரன், உதவித்தலைமையாசிரியை தீபா, மற்றும் ஆசிரியர்கள் அலுவலகப்பணியாளர்கள் வாழ்த்தி பாராட்டினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி