திருவள்ளூர் : 18வது நாடாளுமன்றத்திற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற உள்ள வாக்குப்பதிவு தொடர்பாக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 4கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இன்று அனைத்து தொகுதிகளிலும் முதற்கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் அதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாளுதல், கட்டுப்பாட்டு இயந்திரத்தை கையாளுதல், முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்துவது, அதனை சோதனை மேற்கொண்டு மீண்டும் வாக்குப்பதிவை தொடர்வு என பல்வேறு பணிகள் குறித்து வீடியோ மூலம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த பயிற்சி முகாமை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் பணிகள் குறித்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு எடுத்துரைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தில் 10இடங்களில் 16224 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கண் பயிற்சி நடைபெற்று வருவதாகவும் , பொன்னேரியில் 2183 அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி மாத்தி வாக்குச்சாவடி மையம் அமைத்து, வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது குறித்து செயல்முறை பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் எந்த தொய்வுமின்றி தேர்தல் பணிகள் நடத்திடவும், நேர்மையாகவும், பிரச்சினையின்றி தேர்தலை நடத்திட அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அப்போது தெரிவித்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு