இராமநாதபுரம்: இராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளராக திரு.பண்டாரி யாதவ், இ.ஆ.ப., நியமனம் செய்யப்பட்டு, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகை அறை எண்-1-ல் தங்கி பணியாற்றி வருகிறார். இராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்கள் தொடர்பாக தினசரி காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை தேர்தல் பொது பார்வையாளரை நேரில் சந்தித்து தெரிவிக்கலாம் எனவும், மேலும், அலைபேசி எண்:9361541271 மற்றும் தொலைபேசி எண்: 04567-230416 மூலமாகவும் அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்கள் குறித்து தெரிவிக்கலாம் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணு சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி