திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் காலங்களில் கோடை வெயில் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கக் கூடும். பொதுவாக மனிதனின் சாதாரண உடல் வெப்ப நிலை சுமார் 37 டிகிரி சென்டி கிரேடு (36.1-37.8 C) ஆகும். (65). வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், கைக்குழந்தைகள், கர்ப்பிணிப்பெண்கள், இளம்சிறார்கள் மற்றும் நாட்பட்ட உடல் நலக்குறைபாடு உள்ளவர்கள் அதிக வெப்பம் தொடர்பான நோய்களுக்கு ஆளாகக் கூடும். கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி அறிவுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா