சிவகங்கை : கூட்டு குடிநீர் வழங்கும் நிலையத்திலிருந்து வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அங்கு சென்ற நகர்மன்ற தலைவர் சி.எம்.துரை ஆனந்த் அவர்கள் பணியினை ஆய்வு செய்து துரிதப்படுத்தினார். உடன் நகராட்சி ஆணையாளர், நகராட்சி பொறியாளர், கண்காணிப்பாளர் பிட்டர், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், ஜெயகாந்தன், ராமதாஸ் உடன் இருந்தனர். மேலும் நகர் மன்ற தலைவர் கூறியது இன்று முதல் (14/04/2024)
சிவகங்கை முழுவதும் குடிநீர் விநியோகம் சீராக செயல்படும் என்றார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி