கிருஷ்ணகிரி: 9- கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடிகளுக்கு வாக்கு பதிவின் போது தேவையான படிவங்கள், எழுதுப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் அனுப்ப தயார் நிலையில் உள்ளதை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ.ஆ.ப., நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாராணி, வட்டாட்சியர் சக்திவேல் ஆகியோர் உள்ளனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்