ராமநாதபுரம் : திருவாடானை, ஏப்ரல்.21- ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பிரதான கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் இன்றி சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் போட்டியிட்டனர். இதில் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சசிகனி என்பவர் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டார். அவர் திருப்பாலைக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்த பின்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது கடந்த சில தேர்தல்களில் அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட பிரதான கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகள் பெறும் நிலையை உருவாக்கி விட்டனர்.
பணத்தைப் பெற்றுக் கொண்டு வாக்களிப்பது முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல். வாக்குக்கு பணம் பெறுவதை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முன்பு வாக்குப்பதிவு செய்யும் இடம்நான் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறேன். எனது ஓட்டுடன் கூடுதலாக ஒரு ஓட்டு விழுந்தால் கூட அது எனது பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றி. எனவே அனைவரும் வாக்குக்கு பணம் பெறுவதை தவிர்த்து தங்களது விருப்பத்திற்கு ஏற்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி