சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில், சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள் அவர்களை போற்றும் வகையில், சென்னை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள இளங்கோவடிகளின் திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். உடன் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி