சிவகங்கை: சிவகங்கையில் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் , சிவகங்கை சீமை கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியசங்கமும் இணைந்து நடத்தும் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு . சிவகங்கை நகர்மன்ற தலைவர் சிஎம். துரை ஆனந்த் அவர்கள் சிறப்புரையாற்றியும்,தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கியும், மேலும் இலவச நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக விலையில்லா வேட்டி மற்றும் சேலைகளை வழங்கியும் தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்கள் கூறினார். இந்நிகழ்ச்சியில் மேலும் ஒரு சிறப்பாக சிவகங்கையில் வெயிலின் தாக்கம் அதிகமாமாக இருப்பதால்,
மே 1 தொழிலாளர் தினமான இந்த நன்னாளில் உழைப்பாளர்களுக்கு வெயில்காலம் முழுவதும் பயன்படும் வகையில் குடிநீர் தொட்டியை திறந்து வைத்து அவர்களுக்கு குடிநீர் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் கட்டிட தொழிலாளர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், ரவி, சரவணன், பிரபாகரன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், ராமதாஸ், தாஸ் , சரவணன், ஜீவானந்தம் ஆகியோரும், திரளான உழைப்பாள பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி