திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சாலையில் மன்னவனூர் மற்றும் பூம்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டுத் தீ பரவி வருவதை தடுக்கும் வகையில் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சார்பில் (01/05/2024) அன்று முதல் தீயணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை முன்னிட்டு வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறை வாகனங்கள், தண்ணீர் டேங்கர் வாகனங்கள் எளிதாக போக்குவரத்து சிரமம் இன்றி செல்வதற்கு வழிவகை செய்யும் வகையில் பூம்பாறை ஜங்ஷன் முதல் மன்னவனூர், கூக்கள் சாலைகளில் சுற்றுலா வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் (01/05/2024) காலை முதல் (02/05/2024) இரவு வரை இயங்க அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் மற்றும் கூக்கள் பகுதி கிராமங்களில் வசிக்கும் உள்ளூர் பகுதி பொதுமக்கள் வாகனங்களில் செல்வதற்கு எவ்வித தடையும் இல்லை என ஏற்கனவே முன்னறிவிப்பு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் தீயணைப்பு பணிகள் (03/05/2024) அன்றும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளதால் மேற்கண்ட போக்குவரத்து மாற்றம் (03/05/2024) அன்றும் தொடர்ந்து அமல்படுத்தப்பட உள்ளது, என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர். பூங்கொடி, இ .ஆ .ப., தெரிவித்துள்ளார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா