சிவகங்கை : தமிழகத்தில் கொடை வெயிலின் தாக்கம் உக்கிரமடைந்து வரும் சூழலை கருத்தில் கொண்டு சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகர் SDTU தொழிற்சங்கம் சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா இந்நிகழ்வை SDPI மானாமதுரை சட்டமன்ற தொகுதி தலைவர் சதாம் உசேன் அவர்கள் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கி தொடங்கி வைத்தார்.
இதில் 200 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது கொடைக்கலாம் முடியும் வரை இப்பணியை செய்ய தீர்மானிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் SDPI கட்சியின் நகர தலைவர் அபூபக்கர் நகர செயலாளர் காதர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சையது காசிம் SDTU தொழிற்சங்க நகர தலைவர் சையத் இப்ராஹிம் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி