திருவள்ளூர்: ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உட்பட்ட துபாய் நகரில், இம்மாதம், 12 மற்றும் 13ம் தேதிகளில், 10வது சர்வதேச அளவிலான யோகாசன போட்டிகள் நடந்தன. எஸ்.ஜி.எஸ்., இன்டர்நேஷனல் யோகா பவுண்டேஷன், துபாய் ஜெயின் அறிவுசார் அமைப்பு, உலக யோகாசன அமைப்பு இணைந்து நடத்திய போட்டிகளில், இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங், ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட, 20 நாடுகளில் இருந்து, 400க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டியாளர்கள் பிரித்து, வயது வாரிய போட்டிகள் நடத்தப்பட்டன. அந்த போட்டியில், கவரைப்பேட்டை அடுத்த பெருவாயல் பகுதியில் இயங்கி வரும் டி.ஜெ.எஸ்., பப்ளிக் (சி.பி.எஸ்.இ) பள்ளி மாணவர்கள், மகிழவன், வயது (9). யுவன், வயது(13). ஆகியோர் அவரவர் வயது பிரிவில் தங்கம் பதக்கம் வென்றனர். மேலும் சஞ்சனா, வயது (12). ஜீவிகா, வயது (11). ஆகியோர் வெள்ளி பதக்கமும் திருசிவபூரணி, வயது (11). ஜோஷிகா, வயது (11). ஆகியோர் வெண்கல பதக்கமும் வென்றனர்.
அதேபோன்று டி.ஜெ.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஹரினிதா, வயது (8). பிரதீபன், வயது (14) ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர். மேற்கண்ட அனைத்து மாணவர்களுக்கும் டி.ஜெ.எஸ்., கல்வி குழும வளாகத்தில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும் டி.ஜெ.எஸ்., கல்வி குழும தலைவருமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் நடந்த பாராட்டு விழாவில், டி ஜே எஸ் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் பழனி, மற்றும் டி ஜே எஸ் பப்ளிக் பள்ளியின் தாளாளர் சமூக நற்பணிச் செம்மல் T.J.S G தமிழரசன், டி ஜே எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ஞானப்பிரகாசம். டி ஜே எஸ் பப்ளிக் பள்ளியின் முதல்வர் J அசோக், , யோகா பயிற்சியாளர் சந்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, சாதனை படைத்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு