திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் அடங்கிய மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மீஞ்சூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மருத்துவ பரிசோதனை செய்து அவர்களுக்கு மதிய உணவு சத்தான உணவு வழங்க ஏற்பாடு செய்து பட்டு வந்தது. இந்த நிலையில் சமையல் கூடம் பழதானதால் மதிய உணவு செய்யப்படவில்லை இது குறித்து தகவல் அறிந்த மீஞ்சூர் பஜார் வீதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் சிவா விஸ்வநாதன் தகவல் அறிந்ததும் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பீட்டில் சமையல் கட்டப்பட்டு அறை அதற்கான திறப்பு விழா நடைபெற்றது . சமையல் கட்டிடத்தை சமூக ஆர்வலர் விஸ்வநாதன் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து தொடர்ந்து 120 கர்ப்பிணி தாய்மார்களுக்கு அவரது சொந்த செலவில் முட்டை உள்பட சத்துணவு உணவு வழங்கப்பட்டது. இதில் ஆரம்ப சுகாதார தலைமை மருத்துவர் மகேந்திரன் வர்மன் ,கம்யூனிஸ்ட் தலைவர் கதிர்வேல் பிரசன்னா பாலாஜி, முரளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் ,செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு