விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், (22.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், கீழகொண்டரை குளம் ஊராட்சி, தேளி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.20 இலட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் கட்டப்பட்டு வருவதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.77 இலட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக்கடை கட்டப்பட்டு வருவதையும், கோட்ட காட்சியேந்தல், ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.80 இலட்சம் மதிப்பில் பாலம் அமைக்கப்பட்டு வருவதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.55 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்படும்.
நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், வேலனேரி ஊராட்சியில் முல்லிக்குடியில் நபார்டு நிதியின் கீழ் ரூ.3.15 கோடி மதிப்பில் பார்த்திபனூர்- வேலனேரி சாலையில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14.31 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும்,
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.77 இலட்சம் மதிப்பில் புதிய நியாய விலைக்கடை கட்டப்பட்டு வருவதையும், மாவட்ட ஆட்சித்தலைவர் , நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார். இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி