சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில் உள்ள மருது பாண்டியர் பூங்காவில் நடைபெறவுள்ள கோடை திருவிழாவை முன்னிட்டு அங்கு சென்ற நகர்மன்ற தலைவர் சிஎம்.துரை ஆனந்த் அவர்கள் நடைபெற்று வரும் முன் ஏற்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார். அப்பொழுது மின்விளக்குகள், வாட்டர் சப்ளைகளை இயக்கிப் பார்த்தார். அதை பொதுமக்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்வின் போது ஒப்பந்ததாரர் கண்ணன், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், ராமதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி