சென்னை: சென்னையில் நடைபெற்ற விழாவில் செங்கை நகர பிரமுகரும், மனித உரிமை ஆலோசகரும், இரா. வே அரசினர் கலைக்கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க முன்னாள் தலைவரும், ஆலோசகருமான லயன். ஜெ. ஜான்சன் அவர்களுக்கு தமிழகத்தின் புகழ் பெற்ற அறம் விருதுகள் அறக்கட்டளை மூலமாக சேவை செம்மல் விருது நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில் இயக்குனர் திலகம் மற்றும் நடிகருமான . K. பாக்யராஜ் அவர்களால் வழங்கப்பட்டது. லயன். ஜெ.ஜான்சன் பல்வேறு சமுதாய நல பணிகளையும், அரசினர் கலை கல்லூரியில் தற்போது பயின்று வரும் முன்னாள் மாணவர்களின் நலனுக்காகவும், செங்கல்பட்டு சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் கிராமப்புற மக்களின் பொருளாதார வசதி மேம்படுத்தும் விதமாகவும் அவர்களின் மனித உரிமைக்கான விஷயங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருபவரும், செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், சென்னை போன்ற பகுதியில் உள்ள கல்லூரி, பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கான போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி மற்றும் மோட்டி வேஷன் வகுப்புகளையும் மாணவர்களின் எதிர்காலம் சிறந்தோங்க தொடர்ந்து பாடுபட்டு வருகின்றார்.
மேற்கண்ட சாதனைகளுக்காக தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற அறம் விரும்பு அறக்கட்டளையின் மூலமாக வழங்கப்படும் அறம் விருதுகளில் மிக முக்கிய விருதான சேவைச் செம்மல் விருது தமிழகத்தில் உள்ள 7 சாதனையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.அதில் நமது lion. ஜெ. ஜான்சன் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.கடந்த 2022 ல் சேவா ரத்னா விருதும், 2023 ல் மக்கள் சேவகர் விருதும், தற்போது2024ல் சேவை செம்மல் விருதும் பெற்று செங்கை நகருக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சேவை செம்மல் விருது பெற்ற இவரை அரிமா மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், நகர பிரமுகர்கள், வர்த்தக சங்க உறுப்பினர்கள்,நடப்போர் நலவாழ் சங்க உறுப்பினர்கள் மற்றும் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் பாராட்டினார்கள்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்