இராணிப்பேட்டை: மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டமானது அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை அதிகரிக்கும் பொருட்டு செயல்படுத்தப்படுகிறது. அரசு பள்ளிகளில் 6முதல் 12ம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு இடைநிற்றல் இன்றி படிக்கும் வரை ரூபாய் 1000 வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
இராணிப்பேட்டையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
எபினேசர்