மதுரை: கோடை விடுமுறைக்கு பின் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவ மாணவிகளின் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், அவர்களுக்கு அரசால் வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை பெற ஆதார் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆதாரை புதுபிக்கவும், குறைகளை சரி செய்ய மாணவ மாணவிகள் பள்ளியிலிருந்து விடுமுறை எடுத்து ஆதார் மையங்களுக்கு சென்று திருத்தங்களை மேற்கொள்ளும் நிலையை மாற்ற தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளிலேயே ஆதார் சிறப்பு முகாம்களை நடத்தி அதன் மூலம் மாணவ மாணவிகள் ஆதாரில் உள்ள குறைகளை சரி செய்ய தமிழ்நாடு அரசு முயற்சி எடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் உசிலம்பட்டி நகர் மன்ற துணைத் தலைவர் தேன்மொழி இந்த சிறப்பு ஆதார் மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, உசிலம்பட்டி பகுதியில், உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் முன் அறிவிப்பு கொடுக்கப்பட்டு, சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும், பள்ளி மாணவ மாணவிகள் ஆதாரில் உள்ள குறைகள் மற்றும் புதுப்பித்தல்களை செய்து கொள்ளலாம் என, தெரி
விக்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி