• About
  • Contact
Friday, June 6, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Latest News

முதலமைச்சர் உத்தரவு

admin2 by admin2
June 13, 2024
in Latest News
0
பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்களில் இருந்து விவசாய பயன்பாட்டுக்கும், பானைத் தொழில் செய்யவும் கட்டணம் இல்லாமல் மண், வண்டல் மண், களிமண் வெட்டி எடுக்க அந்தந்த வட்டாட்சியரிடமே இணையவழியில் அனுமதி பெறும் புதிய நடைமுறை அமல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்களிலிருந்து விவசாயப் பயன்பாட்டுக்கும் மற்றும் பானைத் தொழில் செய்யவும் மண், வண்டல்மண், களிமண் எடுக்க மாவட்ட ஆட்சியர்களால் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டுஆண்டுகளில் இருந்த நல்ல மழைப்பொழிவால் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் நீர் தேங்கி இருந்தநிலையில், விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் போன்றோர் மண் எடுத்து பயன்பெற முடியாத சூழ்நிலை இருந்தது.

தற்போது இந்த நீர் நிலைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால், இவற்றை தூர்வாரி, கொள்ளளவை உயர்த்தினால், வரும் மழைக்காலத்தில் அதிக அளவு மழை நீரை சேமிக்க முடியும். தற்போதுள்ள விதிகளில், விவசாய பயன்பாட்டுக்கும், பானைத் தொழில் செய்வதற்கும் அதே கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள கிராமப் பகுதியிலோ உள்ள நீர்நிலைகளிலிருந்து மட்டுமே மண்எடுக்க மேற்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், பல தகுதியான பயனாளிகளுக்கு தேவையான மண் கிடைக்காத நிலை உள்ளது. மேலும், மேற்கூறிய பயன்பாடுகளுக்கு அனுமதி பெற சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று, மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று மண் எடுக்க இயலும். இதனால், பயனாளிகளுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன.

எனவே, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக மேற்கூறிய பிரச்சினைகளை களைந்து புதிய எளிதானநடைமுறையை வகுத்திட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். இதனடிப்படையில், சிறுகனிம விதிகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், மற்றும் கால்வாய்களிலிருந்து கட்டணம் இல்லாமல் விவசாயப் பயன்பாட்டுக்கும் மற்றும் பானைத் தொழில் செய்வதற்கும் மண் எடுக்க சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களே இணைய வழியில் அனுமதி வழங்கும் வகையில் புதிய நடைமுறை செயல்படுத்தப்படும்.

இது மட்டுமன்றி, விவசாயிகள் தாம் வசிக்கும் வட்டத்தில் உள்ள எந்த ஒரு நீர் நிலையிலும் தேவைப்படும் மண்ணை எடுத்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைகளை பயன்படுத்தி விவசாயிகள் அனைவரும் இணைய வழியில் விண்ணப்பம் செய்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அளவிலேயே அனுமதிகளை எளிதில் பெற்று, தாம் வசிக்கும் வட்டத்தில் உள்ள எந்த ஒரு நீர்நிலையில் இருந்தும் தேவைப்படும் மண்ணை எடுத்து, தமது வயல்களை வளம் பெறச் செய்யலாம். இதன் மூலம் விவசாயிகள் எளிதில் பயன்பெறுவதோடு, மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை உயர்த்தி அதிக மழைநீரைச் சேமிக்க முடியும்.

மதுரையிலிருந்து  நமது குடியுரிமை நிருபர்.

திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது

Previous Post

மக்கள் தொடர்பு முகாம்

Next Post

வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி

admin2

admin2

Next Post
வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி

வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

குடியுரிமை நிருபர்கள்

தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

June 3, 2025
ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில்  கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

June 1, 2025
மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

June 1, 2025
மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

June 1, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.