மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட
பாலகிருஷ்ணாபுரம் பெரியார் நகரில் தெருக்களில் ஆறாக ஓடும் தொற்று நோய் பரவக்கூடிய கழிவு நீர்கள் இக் கழிவு நீரால். அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் கொசுக்களாலும் மலேரியா டெங்கு போன்ற தொற்று நோய்களாலும் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட இரும்பாடி ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் கழிவுநீர் வாய்க்கால் சீரமைத்து தருமாறு பலமுறை கோரிக்கை வைத்தும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகிகள் செவி சாய்க்காமல் இருந்து வருகின்றனர். இதனால் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட இரும்பாடி ஊராட்சிக்கு இக்கழிவு நீர் கால்வாயை சீர்மைத்து தர உத்தரவிட வேண்டுமென்று இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது