செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட சிங்கபெருமாள் கோவில், ஆப்பூர், ரெட்டிபாளையம், ஆத்தூர், வெங்கடாபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் பட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டை, சாலை வசதி, மின்சார வசதி, மாற்று திறனாளிகள் உள்ளிட்டோர் தங்களின் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் அருண்ராஜிடம் அளித்தனர். இந்த முகாமில் 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவடட் ஆட்சியர் உறுதியளித்தார். இந்த முகாமில் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்