மதுரை: மதுரை மாவட்டம் இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் மாயாண்டி கோவில் தெரு அருகே தயார் நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடம்.
இக் கட்டிடம் அனைத்து வேலைகளும் முடிந்த பின் தயார் நிலையில் உள்ள நிலையில் குழந்தைகளின் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்.லோ. அன்பரசன் கூறுகையில். அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் சத்துணவு அங்கன்வாடியில் குழந்தைகளின் பயன்பாடு இருக்கு வராமல் இருப்பதால். சோழவந்தான் செல்லும் பாதையில் உள்ள அங்கன்வாடிக்கு சாலையை கடந்து செல்ல குழந்தைகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். என்றும் அருகே இருக்கும் அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விரைவில் இக்கட்டத்தை திறந்து குழந்தைகளுக்காக செயல்படுத்த வேண்டும் என்று வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர். திரு. கதிரவன் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு விரைவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடியை விரைவில் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது