செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசு, முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென செங்கல்பட்டு மாவட்ட கழக செயலாளர் அனகை டி.முருகேசன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ஆனந்த்ராஜ், மாவட்ட பொருளாளர் பிரகாஷ் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் நாகராஜன் செங்கல்பட்டு நகர கழக செயலாளர் முருகன் தலைமை தாங்கினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் ஏழுமலை காட்டாங்குளத்தூர் எத்திராஜ் காட்டாங்குளத்தூர் வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் விஜயகுமார் மறைமலைநகர் நகர செயலாளர் ஜெயபால் மற்றும் தேமுதிக மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக பகுதி மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திமுக அரசுக்கு எதிராக மாபெரும் கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்