மதுரை : மதுரை மாவட்டம் இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் மாயாண்டி கோவில் அருகே தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை திருமங்கலம் கோட்டம் சார்பாக மதுரை கோமாரி நோய் தடுப்புச் சட்டம் 5-ஆவது சுற்று (NADCP-FMDCP) கால்நடைகளுக்கான மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. கடந்த (10- 6-2024) முதல் (10-7 -2024) வரை சுற்று வட்டார பகுதிகளான இரும்பாடி. கருப்பட்டி நாச்சிகுளம். சாலாச்சிபுரம் அமச்சியாபுரம் கணேசபுரம் பகுதியில் உள்ள கால்நடைகளை பொதுமக்கள் பரிசோதனை செய்தனர். மேலும் இப்பொகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் திரு. லெட்சர்கான் சாகுல் ஹமீது மற்றும் லோ.அன்பரசன். அவர்கள் கூறுகையில் கால்நடை மருத்துவத்திற்கான இட வசதிகளை சம்பந்தப்பட்ட இரும்பாடி ஊராட்சி நிர்வாகம் கால்நடைகளை வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் கால்நடைகளுக்கும் போதிய இட வசதி ஏற்படுத்தி தரவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளனர்..
மேலும் வரும் காலங்களில் கால்நடைகள் பரிசோதனை செய்வதற்காக 15 தினங்களுக்கு ஒரு முறை அரசு மருத்துவர் ஊராட்சி நிர்வாகம் தேர்வு செய்து ஒதுக்கிய இடத்தில் கால்நடைகளை பரிசோதனை செய்வதற்கு அரசு முன்வர வேண்டும் என்றும். மேலும் கால்நடைகளின் மருத்துவ பரிசோதனை போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால். சுற்று வட்டார பகுதிகளில் கால்நடைகளுக்கான பரிசோதனை விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் மேலும் இந்த பகுதியில் நிரந்தர கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது