திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் அடங்கிய பகுதிகளுக்கான கடந்த ஏழாம் தேதி துவங்கி 13 நாட்களாக நடைபெற்ற நிலையில் இன்று ஜமாபந்தி முகாம் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளுக்கான ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு சார் ஆட்சியர் சங்கீத் பல்வந்த் வாகே தலைமை தாங்கினார். இம்முகாமில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். சோழவரம் ஒன்றியம், மீஞ்சூர், ஆரணி, கோளூர் பகுதிகளிலிருந்து பொதுமக்களின் முதியோர் ஓய்வூதியம், பட்டா உள்ளிட்ட ஆயிரத்தி நூறுக்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
உட்பிரிவு பட்டா 50 பேருக்கும் முழுப்புலம் பட்டா 124 பேருக்கும் வழங்கப்பட்டது. இதேபோல் முதியோர் உதவித்தொகைக்கான ஆணை 50 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. குடும்ப அட்டை 25 பேருக்கு புதிதாக வழங்கப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இம்முகாமில் வட்டாட்சியர் மதிவாணன் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு