திருவள்ளூர் : மாவட்டம் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் கடந்த 13 நாட்களாக நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா முதியோர் உதவித்தொகை பிறப்புச் சான்றிதழ் குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் மொத்தமாக 1109 மனுக்கள் பெறப்பட்டு அதில் 249 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மேலும் 860 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது மீதமுள்ள மனுக்களும் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு தீர்வு காணப்படும் என சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் தெரிவித்தார். பின்னர் 249 பயனாளிகளுக்கும் வீட்டு மனை பட்டா முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் சார் ஆட்சியர் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த் வட்டாட்சியர் மதிவாணன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு