செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புலிப்பாக்கம், மேலமையூர், அஞ்சூர், தென்பாக்கம், ஆலப்பாக்கம், வல்லம், ஆத்தூர், வில்லியம்பாக்கம், திம்மாவரம், பாலூர், ரெட்டிப்பாளையம், உட்பட அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கலைஞர் கனவு இல்லம் திட்ட கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாழடைந்த ஊரக வீடுகளை சீரமைத்தல், 2024-25ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் ( ஓட்டு வீடுகள் மற்றும் சாய்தள காங்கிரீட் கூரை வீடுகள் மட்டும்) பயனாளிகளைள தேர்ந்தெடுத்தல் 2000-01ஆண்டிற்கு முன்பு கட்டப்பட்ட ஓட்டு வீடுகள் மற்றும் சாய்தள காங்கிரீட் கூரை வீடுகள் பழுது நீக்கம் செய்து தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கணெக்கெடுப்பு விவரங்களை கிராம ஊராட்சி அளவிலான குழு மூலம் கள ஆய்வு செய்து சரிபார்க்கப்பட்ட தகுதியான பயனாளிகள் கலைஞர் கனவு இல்ல திட்ட மூலம் வீடுகளும் மற்றும் சேதலமடைந்த வீடுகளின் பயனளிகளுக்கு வீடுகள் வழங்கியும் மேலும் வீடுகள் பட்டியலிருந்து தெரிவு செய்து 2024-05 ஆம் ஆண்டிற்கான பயனாளிகளை தேர்ந்தெடுத்தல் போன்றவைகள் பற்றிய தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
இதனைத் தொடர்ந்து திம்மாவரம் ஊராட்சி ஒன்றியத்தின் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி ஆணையர் பாபு தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் நீலமேகம் வாட் உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர் ரவி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்