திருவள்ளூர்: ஆவடி பருத்திப்பட்டு லட்சுமி கிரீன் சிட்டியில் டம்மியாக இருக்கும் டிரான்ஸ்பார்மருக்கு மின்சாரம் கொடுக்க வேண்டி தமிழக மக்களுக்கு பல நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்படும் ஆவடிக்கு உட்பட்ட மின்வாரியம் யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் செயல்படும் ஆவடிக்கு உட்பட்ட மின்வாரியம் சம்பந்தப்பட்ட ஆவடி E E ,பட்டாபிராம் AD, பருத்திப்பட்டு AE ஆகியோர்களிடம் தகவல் தெரிவித்தும் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை(19/6/2024) ஆம் தேதி ஆவடி பருத்திப்பட்டில் உள்ள லட்சுமி கிரீன் சிட்டியில் டிரான்ஸ்பார்மரை முன்னாள் அமைச்சரும் ஆவடி சட்டமன்ற உறுப்பினருமான நாசர் அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ஆனால் இது நாள் வரை அந்த ட்ரான்ஸ்பார்மருக்கு மின்சாரம் கொடுக்காமல் ஆவடி பருத்திப்பட்டு லஷ்மி கிரீன் சிட்டிக்கு உட்பட்ட மின்வாரியம் இருந்து வருகிறது.
2 வருடங்களுக்கு மேலாக ஆவடி பருத்திப்பட்டு லட்சுமி கிரீன் சிட்டியில் உள்ள மக்கள் மின் பற்றாக்குறை காரணமாக வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் வீணாகிக் கொண்டே இருக்கிறது (பழுதாகிறது) என்று தகவல் தெரிவித்து வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இது நாள் வரை எடுக்கவில்லை மின்வாரியம் நான்கு மாதத்திற்கு முன்பு பத்திரிகைகள் மூலமாக செய்திகள் வெளியிட்ட பின் தொடங்கப்பட்ட வேலை ஆமை வேகத்தில் நடந்து (19/6/2024) அன்று டிரான்ஸ்பார்மர் பொருத்தி திறக்கப்பட்டது. அதிலிருந்து தொடர்ந்து (2/7/2024) வரை ஆவடி மின்வாரியம் அந்த டிரான்ஸ்பார்மருக்கு மின்சாரம் கொடுக்காமல் இருந்து வருகிறது. ஏன் என்றும் தெரியவில்லை முன்னால் அமைச்சர் அவர்கள் ஆவடி பருத்திப்பட்டு கிரீன் சிட்டியில் உள்ள டிரான்ஸ்பார்மரை திறந்து வைத்த இந்த செய்தி அனைத்து நாளிதழ்களிலும் வெளியிடப்பட்டும் அன்றிலிருந்து இன்று வரை டிரான்ஸ்பார்மருக்கு மின்சாரம் இல்லாமலேயே டம்மியாக இருந்து வருகிறது.
மக்கள் நலனுக்காக தமிழக அரசு பல நல்ல முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் இது போல் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக திறந்து வைத்த டிரான்ஸ்பார்மருக்கு இது நாள் வரை மின்சாரம் கொடுக்காமல் இருந்து வருகிறது ஆவடி மின்வாரியம் இது குறித்து சம்பந்தப்பட்ட ஆவடி E E அவர்களிடமும் AD அவர்களிடமும் பலமுறை தகவல் தெரிவித்தும் இது நாள்வரை எந்த நடவடிக்கையும் இல்லை இதற்கு மேல் உள்ள மின்வாரிய உயர் அதிகாரிகள் உடனடியாக இதில் தலையிட்டு சம்பந்தப்பட்ட ஆவடி பருத்திப்பட்டு லட்சுமி கிரீன் சிட்டியில் உள்ள மக்களுக்கு இந்த டிரான்ஸ்பாமர் டம்மியாக இல்லாமல் மின்சாரம் லைன் கொடுத்து மக்கள் பயன்பாட்டுக்கு எடுத்து வர வேண்டும் என்று அப்பகுதி மக்களின் வேண்டுகோளாகவே உள்ளது.
நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி