செங்கல்பட்டு: தூய்மை பணியாளர்களுக்கு நியாயம் கேட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உழைப்போர் உரிமை இயக்கம் மாநில செயலாளர் கோபால், மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், மாவட்ட பொருளாளர் பூமிநாதன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். தமிழ்நாட்டில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு நியாயம் கேட்டு (01.07.2024) முதல் உழைப்போர் உரிமை இயக்கத்தின் மாநில தலைவரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான கு.பாரதி காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை சென்னை அம்பத்தூர் கல்யாணபுரத்தில் உள்ள எல்டியுசி மாநில அலுவலகத்தில் தொடர்ந்து இருந்து வருகின்றார்.தூய்மை பணியாளர்களின் கோரிக்கையானது.
தூய்மை பணியாளர்களுக்கு 2017 ஆம் ஆண்டு அரசாணை எண்.62-ன் படி நாள் கூலி மாநகராட்சியில் ரூ.753, நகராட்சியில் ரூ.638, பேரூராட்சியில் ரூ.561, ஊராட்சியில் ரூ.484, ஊராட்சி தூய்மை காவலருக்கு ரூ.242 யை (01.04.2024) முதல் உடனே வழங்கிட வேண்டும் எனவும் தேர்தல் வாக்குறுதிபடி ஆண்டுக்கணக்கில் பணிபுரியும் தூய்மை சுகாதார பிரிவு உள்ளிட்ட பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரப்படுத்த வேண்டும் எனவும் பணியிடத்தில் பெண்களுக்கு கழிவறை வசதி, கையுரை, பாதுகாப்பு உபகரணம் உட்பட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும், நிரந்தர தொழிலாளர்களுக்கு பழைய ஓவூதிய திட்டத்தை அமுல் படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் சம்மந்தமாக தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு தீர்வுக்கான செங்கல்பட்டு மாவட்ட உழைப்போர் உரிமை இயக்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அறிவுடைநம்பியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில் உழைப்போர் உரிமை இயக்கத்தை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இதில் உழைப்போர் உரிமை இயக்கத்தை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்