செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் ஜூலை 15 முன்னிட்டு தனியார் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெருமையை போற்றும் விதமாக என். எம்.எஸ் கல்வி திருவிழாவை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் துவக்கி வைத்து போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் நாராயண சர்மா, பொதுச் செயலாளர் நாடார் மகாஜன சங்கம் கரிக்கோல்ராஜ், நாடார் மகா ஜன சங்கம் ஒருங்கிணைப்பாளர் அவனி மாடசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், நாடார் நாடார் மகா ஜன சங்கம் மாவட்ட தலைவர் எஸ். உத்திரகுமார், மாவட்டச் செயலாளர் கனகராஜ், ஏஜிடி துரைராஜ், ஜான்சன் ஜோசப் ஆண்டனி பாலன் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு துறை சார்ந்த முக்கிய பிரமுகர்கள்,அரசு அதிகாரிகள், பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு என்.எம்.எஸ் கல்வி திருவிழாவை கண்டுகளித்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து 1000திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை தட்டிச் சென்றனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்