செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஒழலூர் ஊராட்சியில் பல வருடங்களாக இயங்கி வரும் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி பராமரிப்பின்றி உடைந்து விழும் அபாயா நிலையில் உள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் இருந்து தான் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் தொட்டி சேதமடைந்து உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் இத்தொட்டி பராமரிப்பின்றி மாற்றாமலும் பல வருடங்களாக பொது மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் மற்றும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயா நிலை உள்ளதாக பொதுமக்கள் சரமாரி புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த குடிநீர் தொட்டியை மாற்றி புது குடிநீர் தொட்டி அமைத்து பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி சுகாதாரமான குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்