செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் திட்டம் 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது நிறுவன ரீதியான பிரசவத்தை ஊக்குவிப்பதன் மூலம் தாய் இறப்பு விகிதங்கள் மற்றும் சிசு இறப்பு விகிதங்களைக் குறைக்கவும் மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் செலவுகளை ஈடுசெய்யவும் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் பிரசவிக்கும் அனைத்து தாய்மார்களுக்கும் ரூபாய் 10,000/- நிதி உதவி ஆரம்பத்தில் வழங்கப்பட்டது. அதன் பின் ஜனவரி 1, 2023 முதல் ரூ. 18,000/- ஆகவும், மே 1, 2024 முதல் ரூ. 20,000/- ஆகவும் அதிகரிக்கப்பட்டது. எனவே, தாய் மற்றும் குழந்தை நலம் பற்றிய அறிவையும், முக்கியத்துவத்தை அதிகரிக்கவும், வள்ளியம்மை மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் திட்டம் பற்றிய செய்தியைப் பரப்பவும் தாய் மற்றும் குழந்தைகள் தினம் நடத்தப்பட்டது.
இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல கிராமங்களில் இருந்தும் ஏராளமான தம்பதியினர் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிறந்த குழந்தைகளுக்கு எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் . வள்ளியம்மை மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ் தாய் மற்றும் சேய் நலன் காக்கவும், குழந்தை வளர்ச்சிக்கு உதவும் வகையில் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் பிறந்த ஒவ்வொரு குழந்தைகளுக்கு தலா 20,000/- ரூபாய் காசோலையினை இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எஸ்.ஆர்.எம் குளோபல் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மணிமங்கை சத்தியநாராயணன் வழங்கினார். வள்ளியம்மை மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ் இன்று முதல் கட்டமாக எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் பிறந்த சுமார் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நிதி உதவியானது வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து எஸ்.ஆர்.எம் குளோபல் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மணிமங்கை சத்தியநாராயணன் அவர் கூறுகையில் திருமதி. வள்ளியம்மை மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் திட்டத்தின் மூலம் நிறைய நபர்கள் பயணடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தை பற்றி உங்களது உற்றார், உறவினர்களுக்கும் தெரியபடுத்துங்கள். மேலும் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் பயன்பெறுவது எனக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இணை துணை வேந்தர் அ.ரவிகுமார், மருத்துவமனை முதல்வர் நிதின் நகர்கர், கூடுதல் பதிவாளர் டாக்டர்.டி. மைதிலி, எஸ்.ஆர்.எம் குளோபல் மருத்துவமனையின் தலைமை செயல் அலுவலர் விபி. சந்திரசேகர் மற்றும் மகப்பேறு மருத்துவத் துறை பேராசிரியர் டாக்டர் எம்.அனுராதா, மற்றும் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாகிகள் என திரளாக கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்