மதுரை: மதுரை மாவட்டம், பொதும்பு ஊராட்சியில், சாலைகள் சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பொதும்பு ஊராட்சியில் அகல்யா வீதியில், சாலையில் சீரமைக்க கற்கள் கொட்டப்பட்டு, நான்கு மாதங்கள் ஆகியும், சாலை பணிகள் மேற்கொள்ளாதால், அவ்வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், மற்றும் பொது மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இது குறித்து, அப் பகுதி மக்கள் பொதும்பு ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும்,புகார் தெரிவித்தும், சாலையை சீரமைக்க ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட அலுவலர் உரிய நடவடிக்கை எடுத்து, பொதும்பு கிராமத்தில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ள சாலையை, துரிதமாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என , இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி