விருதுநகர்: மல்லாங்கி டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. செந்தில் குமார் நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவ – மாணவிகள் கலந்துகொண்ட
டெங்கு விழிப்புணர்வு பேரணியை, மல்லாங்கிணர் பேருராட்சியில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், பேரூராட்சி மற்றும்சுகாதாரத்துறை சார்பாக , டெங்கு
காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரூராட்சி செயல்
அலுவலர் அன்பழகன் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் துளசிதாஸ்
பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். எம்.எஸ். பி .நாடார் மேல்
நிலைப்பள்ளி மாணவர்கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, ஊர்வலமாக நகரின் முக்கிய வீதி வழியாக சென்றனர். அப்போது, டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை பொதுமக்களுக்கு மற்றும் வியாபாரிகளுக்கு விநியோகம் செய்தனர். பள்ளி தலைமையாசிரியர், பேருராட்சி கவுன்சிலர்கள் மாவட்ட பூச்சியியல் வல்லுனர்கள், பாலாஜி, கன்னியம்மாள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்
சீத்தாராமன், சுகாதார ஆய்வாளர் சரத்குமார், உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி