புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலராக பணியாற்றுபவர் டாக்டர். கிருபா சங்கர். இவருக்கு சிறந்த அறுவை சிகிச்சை மருத்துவர் விருது கிடைத்துள்ளது. இதனை புதுக்கோட்டையில் நடந்த உலக மக்கள் தொகை தின விழாவில் மாவட்ட மருத்துவப்பணிகள் துணை இயக்குனர். டாக்டர். மதிகிருஷ்ணமூர்த்தி, கிருபாசங்கரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், மருத்துவ பணிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி