திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய 10 அரசு பள்ளிகளில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி மாணவர்களின் கல்வி கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு நவீன வகுப்பு அறைகள் ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் 100 அங்கன்வாடிகளுக்கு குழந்தைகள் படுப்பதற்கும் அமர்வதற்கும் தரைவிரிப்பான்கள் உள்ளிட்டவைகளை வல்லூர் தேசிய அனல் மின் நிலைய
சமூக மேம்பாட்டு நிதி 50 லட்சம் ரூபாய் உதவியுடன் வழங்கினர். இதில் ஒன்றிய குழு தலைவர் ரவி பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்று பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அங்கன்வாடி ஆசிரியர்களிடம் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன் குமார் வல்லூர் தேசிய அனல் மின் நிலைய அதிகாரி ரவிக்குமார் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு