மதுரை: மாணவர்களின் உயிரைப் பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில், மதுரையில் துணைப்பொதுச் செயலாளர் வழக்கறிஞர் இராம. வைரமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க மருத்து
வரணி மாநில துணைச் செயலாளர் மருத்துவர் திலகவதி, தி.மு.க மாணவரணி மாவட்ட
துணை அமைப்பாளர்கள் சந்துரு மற்றும் திருப்பதி, திராவிட சிட்டி அமைப்பின் கர்நாடகா பொறுப்பாளர் அபி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்டச் செயலாளர் செல்வா,
வி.சி.க. இளைஞரணி அமைப்பாளர் முத்துக்குமார், தி.க .மாநில அமைப்பாளர் செல்வம்,
தி.க. இளைஞரணி மாவட்டத் தலைவர் செல்வப் பெரியார், தி.க .மாணவரணி தேவராஜ் பாண்டியன் ஆகியோர் கருத்துரையாற்றினர். மாநில அறிவுரைஞர் குழு உறுப்பினர் புலவர் ஜெயபால், சண்முகம் கண்டன உரையாற்றினார். அமைப்புச் செயலாளர் புலேந்திரன், மாநில இளைஞரணிச் செயலாளர் சந்தானம், தலைமைக்குழு உறுப்பினர்கள் கருப்பையா மற்றும் ஞானசேகர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பி. அமர்நாத் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் மருத்துவர் சந்திரன் நன்றியுரை ஆற்றினார். பேரவைத் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி