செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட நாடார் மகாஜன சங்கம் ஒவ்வொரு ஆண்டும் கர்மவீரர் காமராஜர் பிறந்த தினத்தை ஒட்டி கல்வித் திருவிழாவை மாநில அளவில் வெகு சிறப்பாக நடத்தி வருகிறது. இந்த ஆண்டு தினத்தந்தி நாளிதழ் மற்றும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஆகியவற்றோடு இணைந்து நடத்திய கர்மவீரர் காமராஜரின் பிறந்த தின கல்வித் திருவிழா மாநிலம் முழுவதும் நாடார் மகாஜன சங்கத்தின் சார்பாக குறிப்பாக கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு தமிழகத்தின் 38 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகியவற்றை உள்ளடக்கிய 48 மையங்களில் மாவட்ட அளவிலான காமராஜர் பேச்சுப்போட்டி நடைபெற்றது. அதில் செங்கல்பட்டு மாவட்ட அளவில் சென்ற வாரம் நடைபெற்ற பேச்சுப் போட்டியை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் .S அருண் ராஜ் இ. ஆ. ப . அவர்கள் மற்றும். மாவட்ட சார்ஆட்சியர் மாவட்ட தன்மைக்கல்வி அதிகாரி .த.சி.கற்பகம். அவர்கள். நாடார் மகாஜன சங்கம் மண்டல செயலாளர்.பிராபாகர் இணைச்செயலாளர். AVS.மாரிமுத்து நாடார் பொதுச்செயலாளர்.கரிகோல்ராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
செங்கல்பட்டு மாவட்ட நாடார் மகாஜன சங்கம் மாவட்டசெயலாளர் . J.கனகராஜ் மாவட்டத் தலைவர் S.உத்திரகுமார் ஒருங்கிணைத்த இப்போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 1200 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். அதில் முதல் பரிசு ரூபாய் 7000 இரண்டாம் பரிசு ரூபாய் 5000 மூன்றாம் பரிசு ரூபாய் 3000 வழங்கப்பட்டது. அதில் 6.7 – 8 வகுப்பு, 9 – 10 வகுப்பு, 11 – 12 ஆம் வகுப்பு என்று மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் மாநில அளவில் விருதுநகர் பெருந்தலைவர் காமராசர் படித்த பள்ளியான சத்திரிய வித்யாசாலாவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டார்கள். மாநில அளவிலான போட்டிக்கு முதல் பரிசு ரூபாய் 50,000 இரண்டாம் பரிசு ரூபாய் 30,000 மூன்றாம் பரிசு ரூபாய் 20,000 ஆயிரம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாநிலம் முழுவதும் இருந்து 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட அப்போட்டியில் 11 – 12 ஆம் வகுப்பில் நாம் காமராஜராக என்ன செய்ய வேண்டும். என்ற தலைப்பில் பேசிய தாம்பரம் சேலையூர் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சார்ந்த டி. எஸ் பரிதி சுடரொளி என்ற மாணவி முதல் பரிசு ரூபாய் 50,000 காசோலையை வென்று சான்றிதழும் பிற பரிசுகளும் பெற்று செங்கல்பட்டு மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.
இதே மாணவி செங்கல்பட்டு மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. ஜூலை 14ஆம் தேதி மாநில அளவிலான போட்டிகளும் 15 ஆம் தேதி பரிசளிப்பு விழாவும் விருதுநகரில் வெகு விமர்சையாக நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் சார்பாக கலந்து கொண்டு முதல் பரிசை வென்ற டி எஸ் பரிதி சுடரொளியை செங்கல்பட்டு மாவட்ட நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் மூலமாக அழைத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் அவர்கள் பாராட்டி பரிசு வழங்கினார்கள். இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். கல்பாக்கம் நாடார்சங்கம் தலைவர். S.பட்டுராஜ் ஊரபாக்கம் .SR.ரத்தினம். மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி நேர்முக.உதவியாளர் உதயக்குமார்.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்